அரசு பள்ளிகளில் முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு 1663 காலிப்பணியிடங்கள்

அரசு பள்ளிகளில் முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு 1663 காலிப்பணியிடங்கள்

தமிழக அரசுப் பள்ளிகளில் உள்ள முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களுக்கான 1663 காலிப்பணியிடங்கள் தற்போது நிரப்பப்படவுள்ளன.

தமிழ்நாடு அரசு பள்ளிகளுக்கு தகுதியான ஆசிரியர்களை தேர்வு செய்யும் பணியில் ஆசிரியர் தேர்வு வாரியம் (டி.ஆர்.பி) செயல்பட்டு வருகிறது. ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தி அதன் மூலம் தகுதியானவர்களை பணியில் அமர்த்தி வருகிறது இந்த அமைப்பு.

தற்போது அரசு பள்ளிகளில் முதுநிலை ஆசிரியர் மற்றும் உடற்கல்வி இயக்குனர் உள்பட காலியாக உள்ள 1663 பணியிடங்களை நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பாடவாரியாக காலியாக உள்ள பணியிடங்கள்: தமிழ் – 218, ஆங்கிலம் – 231, கணிதம் – 180, இயற்பியல் – 176, வேதியியல் – 168, தாவரவியல் – 87, விலங்கியல் – 102, வரலாறு – 146, புவியியல் – 18, பொருளாதாரம் – 139, வணிகவியல் – 125, அரசியல் அறிவியல் – 24, பயோ கெமிஸ்ட்ரி – 1, மைக்ரோபயாலஜி – 1, ஹோம் சயின்ஸ் – 7, தெலுங்கு – 1, உடற்கல்வி இயக்குனர் – 39.

கல்வித்தகுதி:

காலியாக உள்ள பணியிடங்களுக்குரிய பாடப்பிரிவுகளில் முதுநிலை பட்டப்படிப்புடன், பி.எட். ஆசிரியர் பயிற்சி நிறைவு செய்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

வயது வரம்பு:

விண்ணப்பதாரர்கள் 1-7-2017-ம் தேதியில் 57 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும்.

தேர்வு செய்யும் முறை:

எழுத்துத் தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள்.

கட்டணம் :

பொது மற்றும் ஓ.பி.சி. பிரிவினர் ரூ.500-ம், எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் மற்றும் மாற்றுத் திறனாளிகள் ரூ.250-ம் கட்டணமாக செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும். கட்டணத்தை இணையதளம் வழியாக செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை:

காலியாக உள்ள பணியிடங்களுக்கு விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் www.trb.tn.nic.in மற்றும் www.trbonlineexams.in என்ற இணையதளம் வழியாக விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் 30-5-2017-ம் தேதியாகும். விண்ணப்பதாரர்கள் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை கணினிப் பிரதி எடுத்து வைத்துக் கொள்ளவும். இதற்கான எழுத்துத் தேர்வு 2-7-2017-ம் தேதி நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply