அரசு மருத்துவர்களின் வேலைநிறுத்த போராட்டம் ஒத்திவைப்பு

அரசு மருத்துவர்களின் வேலைநிறுத்த போராட்டம் ஒத்திவைப்பு

நாளை முதல் தொடங்கவிருந்த அரசு மருத்துவர்களின் வேலைநிறுத்த போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. . வேலநிறுத்த போராட்டத்தை ஒத்திவைப்பதாக அரசு மருத்துவர்கள் சங்கம் உயர்நீதிமன்ற கிளையில் தகவல் தெரிவித்துள்ளனர்.

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாளை முதல அரசு மருத்துவர்கள் வேலைநிறுத்தம் செய்யப்போவதாக அறிவித்திருந்தனர். கஜா புயல் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் இந்த வேலைநிறுத்தம் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால் வேலைநிறுத்த போராட்டத்தை கைவிடவேண்டும் என்று முதல்வர் சமீபத்தில் கோரிக்கை விடுத்திருந்தார்.

இந்த நிலையில் இன்று அரசு மருத்துவர்கள் சங்கம் சார்பில் உயர்நீதிமன்ற கிளையில் வாதாடிய வழக்கறிஞர் வேலைநிறுத்த போராட்டம் ஒத்தி வைக்கப்பட்டதாக தகவல் தெரிவித்தார்.

 

Leave a Reply