கடந்த இரண்டு நாட்களாக முதல்வர் ஈபிஎஸ் மீது துணை முதல்வர் ஓபிஎஸ் அதிருப்தியில் இருப்பதாக கூறப்பட்டது
இந்த நிலையில் முதல்வர் ஈபிஎஸ் மீது துணை முதல்வர் ஓபிஎஸ் கடும் அதிருப்தியில் இருப்பதாகவும் இதனை அடுத்து அவர் வாகனத்தை தவிர்த்து சொந்த வாகனத்தை பயன்படுத்தி வருவதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன
இதனால் அவர் துணை முதல்வர் பதவியை ராஜினாமா செய்வாரா என்ற கேள்வியும் எழுந்து கொண்டிருக்கின்றன
மேலும் சென்னை மாநகராட்சி சார்பில் இன்று நடைபெறும் விழா ஒன்றின் அழைப்பிதழில் துணை முதல்வர் பெயர் இடம்பெறவில்லை என்பதும் அதே விழாவில் தனியார் நிறுவனத்தின் அழைப்பிதழில் மட்டும் ஓபிஎஸ் பெயர் இடம் பெற்றுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது