அரவக்குறிச்சியில் 63 பேர் போட்டி: வாக்குச்சீட்டில் தேர்தலா?

அரவக்குறிச்சியில் 63 பேர் போட்டி: வாக்குச்சீட்டில் தேர்தலா?

அரவக்குறிச்சி சட்டப்பேரவை இடைத்தேர்தலில் 63 பேர் போட்டியிடுவதாக இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. 63 வேட்பாளர்களுக்கும் வாக்குப்பதிவு இயந்திரத்தில் இடம் இருக்க வாய்ப்பு இல்லை என்பதால் இங்கு வாக்குச்சீட்டு முறையில் தேர்தல் நடைபெற வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது

வரும் மே 19ஆம் தேதி திருப்பரங்குன்றம், ஒட்டப்பிடாரம், அரவக்குறிச்சி, சூலூர் ஆகிய நான்கு தொகுதிகளில் இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது

இந்த நிலையில் இந்த நான்கு தொகுதிகளுக்கும் வேட்புமனு தாக்கல் தேதி முடிவடைந்துள்ள நிலையில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியாகியுள்ளது. இதில் அரவக்குறிச்சி சட்டப்பேரவை இடைத்தேர்தலில் 63 பேர் போட்டியிடுவதாக இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதேபோல் ஒட்டப்பிடாரம் தொகுதியில் 15 பேர்களும், சூலூர் தொகுதியில் 22 பேர்களும், திருப்பரங்குன்றம் தொகுதியில் 37 பேர்களும் போட்டியிடுகின்றனர்.

Leave a Reply