அருகம்புல் பக்கோடா

அருகம்புல் பக்கோடா

என்னென்ன தேவை?

அருகம்புல் – அரை கப்

கடலை மாவு – 1 கப்

அரிசி மாவு – கால் கப்

பயத்த மாவு – 4 டீஸ்பூன்

(வறுத்து அரைத்தது)

வெங்காயம் – 1

இஞ்சி – சிறு துண்டு

பச்சை மிளகாய் – 3

உப்பு, நெய், நல்லெண்ணெய் – தேவையான அளவு

எப்படிச் செய்வது?

அருகம்புல்லின் நுனிப் பகுதியை மட்டும் பொடியாக நறுக்கிக்கொள்ளுங்கள். வாணலியில் சிறிது நெய் விட்டு அருகம்புல்லை நிறம் மாறாமல் லேசாக வதக்கி எடுத்துக்கொள்ளுங்கள். அதனுடன் கடலை மாவு, அரிசி மாவு, பயத்த மாவு பொடியாக நறுக்கிய வெங்காயம், இஞ்சி, பச்சை மிளகாய், உப்பு ஆகியவற்றைச் சேர்த்து சிறிது தண்ணீர் தெளித்துப் பிசையுங்கள். வாணலியில் எண்ணெயை நன்றாக காயவைத்து, பிசைந்த மாவை உதிர்த்துப் போட்டு பக்கோடாக்களாகப் பொரித்தெடுங்கள்.

Leave a Reply