பெண் வீராங்கனை பிரதமரிடம் ஆவேச கேள்வி
சமீபத்தில் கேல் ரத்னா விருதுகள் மற்றும் அர்ஜூனா விருதுகள் அறிவிக்கப்பட்ட நிலையில் தனக்கு அர்ஜுனா விருது வாங்க தகுதி இல்லையா என மல்யுத்த வீராங்கனை சாக்ஸி மாலிக் கேள்வி எழுப்பியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
கடந்த 2016ஆம் ஆண்டு ரியோ ஒலிம்பிக் போட்டியில் வெண்கலம் வென்ற சாக்ஸி மாலிக் அவர்களுக்கு கேல் ரத்னா விருது வழங்கப்பட்டது. இந்த நிலையில் இந்த ஆண்டு அவருக்கு அர்ஜுனா விருது வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அர்ஜுனா விருது பட்டியலில் இருந்து அவர் அதிரடியாக நீக்கப்பட்டார்
இதுகுறித்து பிரதமர் மோடிக்கு எழுதிய கடிதத்தில் எனக்கு கேல் ரத்னா விருது வழங்கியதற்கு மகிழ்ச்சி. ஆனால் அதே நேரத்தில் அர்ஜுனா விருது வாங்க வேண்டும் என்பது ஒவ்வொரு வீரரின் கனவாக உள்ளது
நான் அர்ஜுனா விருதைப் பெறுவதற்காக இந்த நாட்டிற்காக வேறு என்ன செய்யவேண்டும்? மல்யுத்த பிரிவில் அர்ஜுனா விருதை பெறும் தகுதி எனக்கு இல்லையா? என கேள்வி கேட்டு கடிதம் எழுதி உள்ளார் இந்த கடிதத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது