அர்னாப் கோஸ்வாமியை சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவு!

ரிபப்ளிக் டிவி எடிட்டர் அர்னாப் கோஸ்வாமியை நீதிமன்ற காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

மும்பையைச் சேர்ந்த நாயக் என்ற பொறியாளரின் தற்கொலை வழக்கில் நேற்று காலை கைது செய்யப்பட்ட அர்னாப் கோஸ்வாமி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்

அவரை நவம்பர் 18ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த நிலையில் அர்னாப் கோஸ்வாமியை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி தர வேண்டும் என மும்பை போலீசார் மனு தாக்கல் செய்துள்ளனர்

இந்த மனு மீதான விசாரணை இன்று நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

Leave a Reply