அர்னாப் கோஸ்வாமி மனைவி, மகன் மீதும் வழக்கு: எப்.ஐ.ஆர் பதிவு!

ரிபப்ளிக் டிவி எடிட்டர் அர்னாப் கோஸ்வாமி நேற்று காலை கைது செய்யப்பட்ட போது அவரை கைது செய்வதை தடுக்க முயன்ற அவரது மனைவி மற்றும் மகன் மீதும் வழக்கு தொடரப்பட்டு உள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

பெண் காவல்துறை அதிகாரி ஒருவரை அர்னாப் கோஸ்வாமியின் மனைவி மற்றும் மகன் தடுத்ததாகவும் ஒரு அரசு அதிகாரியை தன்னுடைய பணியை செய்யத் தடுத்ததாக இருவர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டு எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன

ஏற்கனவே பொறியாளர் நாயக் தற்கொலை வழக்கில் அர்னாப் கோஸ்வாமி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் தற்போது அவருடைய மனைவி மகன் ஆகிய இருவர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

Leave a Reply