அலுவலகம் Vs குடும்பம்: பேலன்ஸ் செய்வது எப்படி?
சிலர் வேலையில உள்ள ஆர்வம் காரணமாக குடும்பத்தை இன்ஸ்டன்ட் அமினிஷியா வந்த மாதிரி மறந்துடுவாங்க. இன்னும் சிலர் குடும்பத்தை கவனிக்கறேன்னு ஆபிஸ் வேலையில கோட்டைவிட்டுட்டு இருப்பாங்க. இந்த இரண்டையும் எப்படி பேலன்ஸ் பண்ணுறது தெரியாம முழிச்சுட்டு இருந்தீங்கன்னா… உங்களுக்குத்தான் இந்த மேட்டர்.
1. நல்ல தொடர்பை உருவாக்குங்க :
தினமும் ஆபிஸ் வந்துட்டீங்கன்னா… ‘ஆபிஸ் ரீச் ஆகிட்டேன்’ சின்ன கால் பண்ணியோ, மெசேஜ் தட்டியோ உங்க பார்ட்னர்கிட்ட சொல்லுங்க. ஆபிஸ்ல இருந்து வேலை காரணமா திடீர்னு வெளியே போறீங்கன்னா மெசேஜ் தட்டிடுங்க. லஞ்ச் டைம்லயோ, பிரேக் டைம்லயோ கொஞ்சம் கேப் கிடைச்சாலும், ப்ரெண்ட்ஸ் கூட ரிலாக்ஸ் ஆகுற அதே சமயத்துல, உங்க பாட்னர்கிட்டயும் ஒரு வார்த்தை ‘சாப்பிட்டியா?’னு கேளுங்க. ஆபிஸ்ல இருந்து கிளம்பும்போதும் சொல்லுங்க. என்னடா, இது ஓவர்…. ஓவர்னு எல்லா இன்பர்மெஷனும் சொல்லிட்டு இருந்தால், நான் எப்படி என்னுடைய வேலையை பார்ப்பேன்?னு நினைக்கறீங்களா? அதுக்கு முன்னாடி, எவ்வளவு நேரம் ஆபிஸ்ல இருந்துட்டே உங்க ப்ரெண்ஸுக்கு வாட்ஸ் அப் அனுப்பறீங்க. ஃபேஸ்புக்-ல சுத்தி சுத்தி வந்து லைக் கொடுக்கறீங்கனு யோசிச்சுக்கோங்க. இதுக்கு எல்லாம் ஒருநாளைக்கு 10 நிமிஷம் கூட தாண்டாது பாஸ்.
2. சொதப்பினால் விட்டுடுங்க :
பலரும் பலவீனம் அடைவதே அவர்கள் ஆபிஸில் செய்த சொதப்பல்களை எண்ணிதான். இதை மனசுக்குள்ள பூட்டி வைச்சு நினைச்சு நினைச்சு வருந்திட்டே இருப்பாங்க. வீட்டுக்கு போனாலும் இதையே யோசிச்சுட்டு இருப்பாங்க. பேமிலி கூடவும் மனசுவிட்டு பேச முடியாம தவியா தவிப்பாங்க. இதை தவிர்த்துடுங்க. மற்ற அனைவரையும் விட, உங்க குடும்பத்தினர் தான் உங்களுக்கு நல்லதை சொல்ல முடியும். முடிந்தால் அந்த சொதப்பல்களையோ/ பிரச்னைகளையோ உங்க பேமிலி மெம்பர்ஸ்கிட்ட சொல்லி ஒரு முடிவு தேடப்பாருங்க. இல்லேன்னா.. ஆபிஸ்ல இருந்து கிளம்பும் போதே அந்த பிரச்னையையும் விட்டுட்டு வந்துடுங்க.
3. எல்லையை செட் பண்ணிக்கோங்க :
காலையில ஆபிஸ் டைம் 9.30 மணியின்னா, சரியான நேரத்துல ஆபிஸ்ல இருங்க. சாயங்காலம் 6 மணிக்கு ஆபிஸ் முடியுதுன்னா… அந்த நேரத்தில் சரியாக கிளம்பிடுங்க. காலையிலயே ஆபிஸ் வரதுக்கும் லேட் பண்ணிட்டு, ப்ரெண்ட்ஸ் கூட வெட்டி அரட்டை அடிச்சுட்டு, ஃபேஸ்புக்ல யார் எல்லாம் லைக் பண்ணி இருக்காங்கனு பார்த்து முடிச்சுட்டு ஆபிஸ் வேலையை ஸ்டார்ட் செய்யவே இழுவையாக இழுத்தா… உங்க வேலை முடிந்து வீட்டுக்கு வரவும் கால தாமதம்தான் ஏற்படும். அலுவலக டைமுக்கு ஒரு பவுண்டரி செட் பண்ணி பழகிக்கோங்க. இது ஆபிஸ் வளர்ச்சிக்கும் உதவும். உங்க குடும்பத்துக்கான நேரத்தையும் செலவழிக்கலாம்.
4. அலுவலகமா குடும்பமா :
பேமிலி கூட எங்கயாவது டூர் போகலாம்னு ப்ளான் பண்ணி இருப்பீங்க. எதிர்பாராத ட்விஸ்டாக அப்பதான் ஆபிஸ்ல இருந்து முக்கியமான வேலை வரும். இது எல்லாமே நடக்கறதுதான். அந்த வேலையை நீங்க இல்லாமல் முடிக்க முடியும்ன்னா, முறையான காரணத்தை சொல்லிவிட்டு பேமிலி கூட கிளம்புங்க. இல்லை வேறு நபருக்கு தகுந்த ஆலோசனைகளை சொல்லி அந்த வேலையை முடிக்கப் பாருங்க. நீங்க கண்டிப்பாக இருக்கணும்ன்னா… டூர் ப்ளானை கொஞ்சம் தள்ளி வைச்சுட்டு, வொர்க்கை இருந்து முடிச்சுகொடுத்துட்டு போங்க. தப்பே கிடையாது. ஆனால், ‘எனக்கு அவசர வேலை வந்துடுச்சு. நீங்க எல்லாரும் டூர் போய்ட்டு வாங்க’னு சொல்லிடாதீங்க. அவங்க டூர் போனாலும், நீங்கள் வராதது ஒரு குறையாக இருந்துட்டே இருக்கும். ‘வேலைக்கு தர்ற முக்கியத்துவத்தை பேமிலிக்கு தர மாட்டிக்கறீங்க’ என்ற எண்ணத்தை குடும்பத்தினர் மத்தியில் விதைச்சுடும். அதனால, பீ கேர் ஃபுல்.
5. டைம் எடுத்துக்கோங்க :
அலுவலக நேரம், குடும்ப நேரம் போக நீங்க ரிலாக்ஸ் பண்ணுறதுக்கான நேரத்தையும் எடுத்துக்கோங்க. அது விளையாட்டோ, ஸ்விமிங்கோ, புத்தகம் படிக்கறதோனு எதுவாகவும் இருக்கலாம். உங்களோட மனஅழுத்தத்தைக் குறைக்க இது உதவும். நீங்க மத்தவங்களுக்காக மட்டும் வாழவில்லை உங்களுக்காகவும் வாழணும்னு புரிஞ்சுகோங்க.
6. ஜாலியா இருங்க :
ஒரு நல்ல கணவராகவோ, அப்பாவாகவோ பேர் எடுக்கணும்ன்னா கொஞ்சம் நேரம் ஒதுக்கித்தான் ஆகணும். ஷாப்பிங்க்கு அழைச்சுட்டு போறது, சினிமாவுக்கு அழைச்சுட்டு போறது மட்டும் என்டர்டெயின்மென்டாக இருந்தாலும்… குழந்தைங்க கூட விளையாடுவது, பார்ட்னர் கூட செஸ் அல்லது கேரம்னு குட்டி கேம்னு விளையாடுவதுனு இருங்க. வெற்றி, தோல்விகளை பேமிலி கூட என்ஜாய் பண்ணுங்க. இது உங்களுக்குள் மனநிறைவைத் தரும். குடும்பம் மகிழ்ச்சியாக இருந்தாலே மனசும் ரிலாக்ஸாக இருக்கும். இது ஆபிஸ்லயும் ஆரோக்கியமான சூழ்நிலையை உருவாக்கும். கொடுத்த டார்கெட்டையும் ஈஸியாக முடிச்சுடலாம்.
அலுவலகத்தில் மட்டும் நல்ல ஊழியர்னு பேரு வாங்கினால் பத்தாது பாஸ். வீட்டுலயும் நல்ல பேர் எடுக்கக் கத்துக்கணும். அதுவும் முக்கியம். நாம வேலை செய்றதே அந்தக் குடும்பத்துக்காகதானே!