அவரை கண்டுபிடிச்சு கொடுங்க! வைகோவின் ஆட்கொணர்வு மனுவால் நீதிபதி அதிர்ச்சி
காஷ்மீர் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லாவை கண்பிடித்து தரக் கோரி சுப்ரீம் கோர்ட்டில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ சார்பில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்யப்பட்டதை அடுத்து இந்த மனுவை விசாரணைக்கு ஏற்பது குறித்து தலைமை நீதிபதி முடிவெடுப்பார் என்று நீதிமன்ற வட்டாரங்கள் கூறுகின்றன.
இதுகுறித்து மதிமுக சார்பில் அளிக்கப்பட்ட ஆட்கொணர்வு மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:
”மதிமுக சார்பில், வரும் 15-ம் அன்று அண்ணாவின் 111-வது பிறந்த நாள் விழா மாநாடு சென்னையில் நடைபெறுகிறது. இம்மாநாட்டில் காஷ்மீர் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா கலந்துகொள்ள ஒப்புக்கொண்டுள்ளார்.
ஆனால், காஷ்மீரில் அசாதாரண சூழல் நிலவுவதால், அவர்களை தொடர்புகொள்ள இயலவில்லை இல்லை. எனவே, உச்ச நீதிமன்றத்தில் காஷ்மீர் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லாவைக் கண்டுபிடித்து உச்ச நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த மத்திய அரசுக்கு உத்தரவிடக் கோரி ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்கிறோம்”.
இவ்வாறு மதிமுக தெரிவித்துள்ளது. இந்த மனு விசாரிக்கப்படுமா? தள்ளுபடி செய்யப்படுமா? என்பது விரைவில் தெரிய வரும்