அஸ்திவாரமே இல்லாமல் பாறை மேல் கட்டப்பட்ட 2 ஆயிரம் ஆண்டுகள் பழமையான கோவில்
திருப்பூர் மாவட்டம், காங்கேயம் அருகே உள்ளது சின்னாரிபட்டி என்ற பகுதியில் 2 ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த அஸ்திவாரமே இல்லாமல் ஒரு பாறையின் மீது அடுக்கடுக்காக கல் வைத்து கட்டப்பட்ட கோவில் தான் “கம்பம்” மாதேசிலிங்கம் கோயில் சிதிலமைடைந்த நிலையில் சமீபத்தில் சீர்செய்யப்பட்டு குடமுழுக்கு நடத்தப்பட்டது.
இந்த கோயிலில் முருகர், விநாயகர், ஈஸ்வரர், அம்பாள் ஆகிய சிலைகள் மீது, ஆண்டுக்கு 41 நாட்கள் சூரிய வெளிச்சமும், 21 நாட்கள் நிலா வெளிச்சமும் விழுவதாக கூறப்படுகிறது.
கோயிலுக்கு எதிரே, ஒரே கல்லினால் ஆன 33 அடி உயர கம்பம் உள்ளதுடன், அதில் ஏற்றப்படும் தீப ஒளி மூலவர்கள் சிலைகள் மீது விழும் வகையில் அமைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
மூலவர் சிலைகள் மீது சூரிய ஒளி விழுவதால் கதவுகளும் முழுமையாக மூடப்படுவதில்லை என்று கூறப்படுகிறது. இந்த கோயிலைப் பற்றிய சிறப்புகள் தற்போதுதான் பரவத் தொடங்கியுள்ளதால் மக்கள் ஆர்வமாக வரத் தொடங்கியுள்ளனர்.