அஸ்வின் 3 விக்கெட்: நிதானமான ஆட்டத்தில் ஆஸ்திரேலியா
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணிகளுக்கு இடையில் அடிலெய்டில் நடந்து வரும் முதலாவது கிரிக்கெட் போட்டியின் 2ஆம் நாள் ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி 4 விக்கெட் இழப்பிற்கு 117 ரன்கள் எடுத்துள்ளது.
ஆஸ்திரேலியாவின் ஹாண்ட்ஸ்கோப் 33 ரன்களும் ஹெட் 17 ரன்கள் எடுத்தும் ஆடி வருகின்றனர். முன்னதாக முன்னணி பேட்ஸ்மேன்களான பின்ச் ரன் ஏதும் எடுக்காமலும், ஹாரிஸ் 26 ரன்களிலும், கவாஜா 28 ரன்களிலும் மார்ஷ் 2 ரன்களிலும் அவுட் ஆனார்கள்
இந்திய வீரர் அஸ்வின் அபாரமாக பந்துவீசி 3 விக்கெட்டுக்களை வீழ்த்தினார். இஷாந்த் சர்மா ஒரு விக்கெட்டை வீழ்த்தியுள்ளார்.