ஆசியாவிலேயே முதல் முறை: தாயிடம் கருப்பை பெற்று குழந்தை பெற்ற மகள்
தாயிடம் இருந்து தானமாக பெற்ற கருப்பையை அவருடைய மகளுக்கே பொருத்தி குஜராத் மருத்துவர்கல் சாதனை புரிந்துள்ளனர்.
இவ்வாறு தாயின் கருப்பையை எடுத்து மகளுக்கு பொருத்தி குழந்தை பெறுவது என்பது உலகிலேயே 9வது முறை என்பதும், ஆசியாவிலேயே முதன்முறை என்பது குறிப்பிடத்தக்கது.
குஜராத் மாநிலம் பரூச் பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவருக்கு கருப்பையே இல்லாததால் அவரால் குழந்தை பெற்றுக் கொள்ள முடியவில்லை. இதையடுத்து அந்தப் பெண்ணுக்கு, அவரின் தாயார் தனது கருப்பையை தானமாக வழங்கினார்.
இதைத் தொடர்ந்து கர்ப்பமடைந்த அந்தப் பெண்ணை புனேயில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தன் வயிற்றில் குழந்தை பிறந்திருப்பது மகிழ்ச்சியைத் தருவதாக அந்தப் பெண் கூறியுள்ளார்.