ஆசியா கோப்பை கால்பந்து: இந்தியா தோல்வி ஏன்?

ஆசியா கோப்பை கால்பந்து: இந்தியா தோல்வி ஏன்?

நேற்று நடைபெற்ற் ஆசிய கோப்பை கால்பந்து போட்டியில் இந்திய அணி, ஐக்கிய அரபு எமிரேட் அணியிடம் 0-2 என்ற கோல்கணக்கில் தோல்வி அடைந்தது. இந்த தோல்விக்கு கோல் போட கிடைத்த மூன்று வாய்ப்புகளை இந்திய வீரர்கள் நழுவவிட்டதே காரணம் என கூறப்படுகிறறது

ஆசிய கோப்பை கால்பந்து போட்டிகள் கடந்த 5ஆம் தேதி முதல் நடைபெற்று வரும் நிலையில் ஏ பிரிவில் உள்ள இந்திய அணி தாய்லாந்து அணியுடன் முதல் போட்டியில் மோதி வெற்றி பெற்றது. அதே உற்சாகத்தில் நேற்று நடைபெற்றா ஐக்கிய அரபு அமீரக அணிக்கு எதிரான போட்டியிலும் வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் ஆட்டத்தின் 41 நிமிடத்தில் ஒரு கோலும், 88வது நிமிடத்தில் ஒரு கோலும் போட்டு ஐக்கிய அரபு அமீரக அணி அசத்தியது. இந்திய அணி கடைசி வரை ஒரு கோல் கூட போடவில்லை. மூன்று இந்திய அணிக்கு கோல் அடிக்க மூன்று வாய்ப்புகள் கிடைத்தபோதிலும் மூன்றையும் இந்திய வீரர்கள் கோலாக மாற்ற தவறியதால் 0-2 என்ற கோல்கணக்கில் இந்தியா தோல்வி அடைந்தது

 

Leave a Reply