ஆசிய கோப்பை கிரிக்கெட்: பாகிஸ்தானை எளிதில் வென்றது இந்தியா

ஆசிய கோப்பை கிரிக்கெட்: பாகிஸ்தானை எளிதில் வென்றது இந்தியா

ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் எந்தவித சிரமமும் இல்லாமல் இந்திய அணி பாகிஸ்தான் அணியை எளிதில் வென்றது

டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தது. இந்திய பந்துவீச்சாளர்களை தாக்குப்பிடிக்க முடியாமல் அந்த அணி 43.1 ஓவர்களில் 162 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. பாபர் அசாம் மற்றும் சோயிப் மாலிக் ஆகிய இருவர் மட்டும் ஓரளவுக்கு தாக்குப்பிடித்து 47 மற்றும் 43 ரன்கள் எடுத்தனர். இந்திய பந்துவீச்சாளர்களான புவனேஷ்குமார் 3 விக்கெட்டுக்களையும் கேதார் ஜாவித் 3 விக்கெட்டுக்களையும் வீழ்த்தினர்

இந்த நிலையில் 163 ரன்கள் என்ற எளிய இலக்கை நோக்கி விளையாடி இந்திய அணி 29 ஓவர்களில் 2 விக்கெட்டுக்களையும் மட்டுமே இழந்து 164 ரன்கள் எடுத்து 8 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. கேப்டன் ரோஹித் சர்மா 52 ரன்களும் தவான் 46 ரன்களும் ராயுடு மற்றும் தினேஷ் கார்த்திக் ஆகியோர் தலா 31 ரன்களும் எடுத்தனர்.

புவனேஷ்குமார் ஆட்டநாயகன் விருதினை வென்றார். இந்த வெற்றியின் மூலம் இந்தியா 4 புள்ளிகளை பெற்றுள்ளது. இன்று ஆப்கானிஸ்தான் மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையே போட்டி நடைபெறவுள்ளது.

Leave a Reply