ஆசிய பணக்கார குடும்ப பட்டியல்: அம்பானி குடும்பத்திற்கு முதலிடம்

ஆசிய பணக்கார குடும்ப பட்டியல்: அம்பானி குடும்பத்திற்கு முதலிடம்

ஆசியாவில் உள்ள பணக்கார குடும்பங்கள் பட்டியலில், அம்பானி குடும்பம் முதல் இடத்தில் பெற்றுள்ளது. ஆசியாவின் 50 மிகப்பெரிய பணக்கார குடும்பங்கள் பட்டியல் ஒன்றை சமீபத்தில் ஃபோர்ப்ஸ் வெளியிட்டுள்ளது.

44.8 பில்லியன் டாலர் நிகர சொத்து மதிப்புடன் முகேஷ் அம்பானி குடும்பம் இந்த பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. கடந்த ஆண்டு முதலிடத்தில் இருந்த சாம்சங் குழுமத்தின் லீ குடும்பம், 40.8 பில்லியன் டாலர் நிகர சொத்து மதிப்புடன் இரண்டாம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. ஆசியாவின் 50 மிகப்பெரிய பணக்கார குடும்பங்களின் மொத்த சொத்து மதிப்பு, கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது 200 பில்லியன் டாலர்கள் அதிகரித்து 699 பில்லியன் டாலர்களாக உள்ளது.

இந்த பட்டியலில் இந்தியாவிலிருந்து மொத்தம் 18 இந்திய தொழிற் குடும்பங்கள் இடம்பெற்றுள்ளன. அசீம் பிரேம்ஜி குடும்பம் 11ஆவது இடத்திலும், ஹிந்துஜா குடும்பம் 12ஆம் இடத்திலும், மிட்டல் குடும்பம் 14ஆவது இடத்திலும், மிஸ்திரி குடும்பம் 16ஆவது இடத்திலும், பிர்லா குடும்பம் 19ஆவது இடத்திலும், கோத்ரெஜ் குடும்பம் 20ஆம் இடத்திலும் உள்ளது.

Leave a Reply