ஆசிய விளையாட்டு போட்டி: இந்தியாவுக்கு 7வது தங்கம்

ஆசிய விளையாட்டு போட்டி: இந்தியாவுக்கு 7வது தங்கம்

இந்தோனேசியா நாட்டில் நடைபெற்று வரும் 18-வது ஆசிய விளையாட்டுப்போட்டியில் குண்டு எறிதல் பிரிவில் இந்திய வீரர் தேஜீந்தர் சிங் தூர் தங்கப் பதக்கத்தை வென்றதால் இந்தியாவுக்கு 7வது தங்கம் கிடைத்துள்ளது.

நேற்று நடைபெற்ற ஆடவருக்கான குண்டு எறிதல் போட்டியில் இந்தியாவின் தஜேந்திர பால் சிங் 20.75 மீட்டர் தொலைவு குண்டு எறிந்து தங்கப்பதக்கத்தை கைப்பற்றினார். தனக்குக் கிடைத்த முதலாவது வாய்ப்பிலேயே 19.96 மீட்டர் தொலைவுக்கு தேஜீந்தர் சிங் தூர் எறிந்து முன்னிலைப் பெற்றார்.

2-வது இடத்தை சீனா வீரர் லி யாங் 19.53 மீட்டர் தொலைவு குண்டு எறிந்து வெள்ளிப்பதக்கத்தையும், கஜகஸ்தான் வீரர் இவான் இவானோவா 19.40 மீட்டர் தொலைவு எறிந்து வெண்கலப் பதக்கத்தையும் கைப்பற்றினார்கள்.

இதன் மூலம் ஆசியப் போட்டிகளில் இந்தியாவுக்கு. 7 தங்கப்பதக்கங்கள், 5 வெள்ளிப்பதக்கங்கள், 17 வெண்கலப்பதக்கங்கள் என மொத்தம் 29 பதக்கங்கள் கிடைத்துள்ளது.

Leave a Reply