ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு
ஆசிரியர் தகுதித்தேர்வுகள் அக்டோபர் 6 மற்றும் 7 ஆகிய தேதிகளில் நடைபெறும் என ஆசிரியர் தேர்வு (டிஆர்பி) வாரியம் அறிவித்துள்ளது. தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் இந்த ஆண்டு என்னென்ன தேர்வுகள் நடத்தப்படும், அதில் எவ்வளவு பேர் தேர்வு செய்யப்படுவர் என்ற தேர்வு கால அட்டவணையை வியாழக்கிழமை வெளியிட்டுள்ளது.
அதில், இடைநிலை ஆசிரியர்களுக்கான தகுதித்தேர்வு (தாள்-1) அக்டோபர் 6-ஆம் தேதியும் (சனிக்கிழமை), பட்டதாரி ஆசிரியர்களுக்கான தகுதித்தேர்வு (தாள்-2) அக்டோபர் 7-ஆம் தேதியும் நடைபெறும் என குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தத் தேர்வுகளுக்கான முடிவுகள் இந்த ஆண்டு நவம்பர் மாதம் வெளியாகும்.
அரசு பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு: ஏற்கெனவே தேர்வு நடத்தி முறைகேடு காரணமாக தேர்வு முடிவை ரத்து செய்யப்பட்ட, 1065 அரசு பாலிடெக்னிக் விரிவுரையாளர்களுக்கான தேர்வு, ஆகஸ்ட் மாதம் 4-ஆம் தேதி நடத்த திட்டமிட்டிருப்பதாகவும், இது நீதிமன்ற தீர்ப்புக்குப் பின்னரே முடிவெடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தத் தேர்வுக்கான முடிவுகள் இந்த ஆண்டு செப்டம்பரில் வெளியாகும்.
விவசாயப் பயிற்றுநர் தேர்வு: 25 விவசாயப் பயிற்றுநர் தேர்வு வரும் ஜூலை 14-ஆம் தேதி நடைபெறும். அதன் முடிவுகள் இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் வெளியிடப்படவுள்ளன.
உதவித் தொடக்கக் கல்வி அலுவலர்: தமிழகப் பள்ளிக் கல்வித்துறையில் காலியாக உள்ள 57 உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் பணியிடங்களுக்கு வரும் செப்டம்பர் 15-ஆம் தேதி தேர்வு நடைபெறும். இந்தத் தேர்வின் முடிவுகள் இதே ஆண்டு அக்டோபரில் வெளியிடப்படும்.
உதவிப் பேராசிரியர் பணியிடங்களுக்கு…: அரசு கலைக்கல்லூரிகள் மற்றும் அரசு கல்வியியல் கல்லூரிகளில் காலியாக உள்ள 1883 பணியிடங்களுக்கு வரும் ஜூன் இரண்டாவது வாரத்தில் சான்றிதழ் சரிபார்க்கப்பட்டு ஜூலை மாதம் பணி வழங்கப்படும்