பிக்பாஸ் போட்டியாளர்கள் நேற்று தங்கள் வாழ்க்கையில் மிஸ் செய்யும் நபர் நபர்களை பற்றி தெரிவிக்க வேண்டும் என எனக்கு டாஸ்க் கொடுக்கப்பட்டது. இதில் போட்டியாளர்கள் அனைவரும் தாங்கள் யாரை மிஸ் செய்கிறோம் என்பது குறித்து பேசி வந்தார்கள். அனிதாவின் முறை வரும்போது அவர் தந்தை தாய் கணவர் என்று மாறி மாறி பேசிக்கொண்டே இருந்தார்
ஒரு கட்டத்தில் வெறுத்துப்போன போட்டியாளர்கள் அவர்களுக்குள் அனிதாவின் பேசியதை கமெண்ட் செய்ய ஆரம்பித்தார்கள். அமைதியாக இருக்கும் அஜித் கூட இந்த டாஸ்க்கின் பெயர் என்ன என ரம்யாவிடம் கேலியும் கிண்டலுமாக கூறியதும் ரம்யா சிரிப்பை அடக்க முடியாமல் சிரிப்பை கட்டுப்படுத்த முயன்றதும் வேடிக்கையாக இருந்தது
அதே போல் இன்னொரு பக்கம் ஷிவானியும் பாலாஜியும் அனிதாவின் பேச்சை கமெண்ட் செய்து கொண்டிருந்தனர். ஒரு கட்டத்தில் பொறுக்க முடியாத சம்யுக்தா ‘அனிதா ரொம்ப போரடிக்கிறது கொஞ்சம் நிறுத்துங்கள் என்று சொன்னதும் தான் அனிதா தன்னுடைய பேச்சை நிறுத்தினார்
அதன்பிறகு சம்யுக்தாவிடம், ‘எனக்கு ஸ்பேஸ் கொடுக்க மாட்டேன் என்கிறார்கள் என்று அவர் சண்டை போட்டதும் தனி கதை