ஆணவத்துடன் பேசிய பிரதமருக்கு மக்கள் தந்த மரண அடி: ஸ்டாலின்

ஆணவத்துடன் பேசிய பிரதமருக்கு மக்கள் தந்த மரண அடி: ஸ்டாலின்

காங்கிரஸ் இல்லாத இந்தியா, கழகங்கள் இல்லாத தமிழகம்” என ஆணவத்துடன் பேசிய பாஜகவினருக்கு மக்கள் புகட்டிய பாடம்தான் இந்த தேர்தல் முடிவு என்றும், பாஜக ஆட்சி செய்த மாநிலங்களில் காங்கிரசுக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி மக்கள் கொடுத்த வெற்றி என்றும் திமுக தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

மேலும் காங்கிரஸ், திமுக குறித்து ஆணவத்துடன் பேசிய பிரதமர் மோடிக்கு மக்கள் தந்த மரண அடிதான் தேர்தல் முடிவு என்றும், பாசிசத்திற்கு எதிரான போரில் இது தொடக்க வெற்றி என்றும் இந்த வெற்றி இனியும் தொடரும் என்றும் ஸ்டாலின் கூறியுள்ளார்.

இருப்பினும் இந்த வெற்றியை காரணம் காட்டி, திமுகவிடம் அதிக தொகுதிகளை காங்கிரஸ் முன்வைக்கும் என்பதும் திமுக எதிர்கொள்ள வேண்டிய ஒரு பெரிய சவால் என்பதும் குறிப்பிடதக்கது.

Leave a Reply