ஆண் குழந்தைகளுக்கும் பாலியல் துன்புறுத்தல்: சின்மயி கூறும் திடுக் தகவல்
பிரபல பின்னணி பாடகியும் டப்பிங் கலைஞருமான சின்மயி சமீபத்தில் கவிஞர் வைரமுத்து மீது பாலியல் குற்றச்சாட்டுக்களை தெரிவித்தார். இந்த விவகாரம் தமிழ் திரையுலகில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. ஆரம்பத்தில் இதனை கண்டுகொள்ளாத மீடியாக்கள், தேசிய அளவில் இந்த பிரச்சனை பேசப்படுவதை அறிந்ததும் இதுகுறித்த செய்திகளுக்கு தற்போது முக்கியத்துவம் கொடுத்து வருகின்றனர்.
இந்த நிலையில் சிறுவயதில் ஆண் குழந்தைகளுக்கும் பாலியல் துன்புறுத்தல் நடந்திருப்பதாகவும், ‘மீ டூ’ ஹேஷ்டேக் மூலம் தற்போது ஆண்களும் தாங்கள் சந்தித்த பாலியல் பிரச்னைகளை கூற தொடங்கியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் வைரமுத்து தன்னிடம் மட்டுமின்றி தனது சக பாடகிகள் பலரிடம் தவறாக நடந்துள்ளார் என்றும் ஆனால் அவர் தவறாக நடந்துகொண்டார் என கூறுவதற்கு சக பாடகிகள் பலருக்கு தயக்கம் உள்ளதாகவும் சின்மயி கூறியுள்ளார்
சின்மயி, பாடகி, வைரமுத்து, பாலியல்