ஆதாரம் இல்லாத செய்தி: கிறிஸ்ட் கெய்லுக்கு ரூ.1.55 கோடி வழங்க நீதிமன்றம் உத்தரவு
கடந்த 2015ஆம் ஆண்டு உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி தொடர் ஆஸ்திரேலியா – நியூசிலாந்து நாட்டில் நடைப்பெற்ற போது போது, வெஸ்ட் இண்டீஸ் அணியின் கிறிஸ் கெய்ல் தங்கியிருந்த அறையில், மசாஜ் செய்யும் பெண் சென்றதாகவும், அவர் முன் கெய்ல் ஆடையின்றி தவறாக நின்றதாக, கெயல் மீது ஆஸ்திரேலியாவின் பிரபல ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டது.
இந்த செய்தியை மையமாக வைத்து அந்நாட்டின் மற்ற செய்தி நிறுவனங்களும் செய்தியை வெளியிட்டன. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இதனால் மனவேதனை அடைந்த கிறிஸ் கெய்ல், “தன்னை குறித்து தவறான செய்தி வெளியிடப்பட்டுள்ளதாகவும், தன் புகழுக்கு பங்கம் ஏற்படுத்தும் விதமாக வெளியிட்ட செய்தி நிறுவனம் மீது நடவடிக்கையும், இழப்பீடும் வழங்க வேண்டும்.” என வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கில் இன்று தீர்ப்பு அளிக்கப்பட்டது. கிறிஸ் கெய்ல் மீதான வழக்கில், எந்த ஆதாரமும் இல்லை, செய்தி நிறுவனத்தால் நிரூபணமும் செய்ய முடியாததால், கெய்லுக்கு $220,770 டாலர் (ரூ. 1 கோடியே 55 லட்சம்) இழப்பீடு வழங்க வேண்டும் என ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல் உச்சநீதிமன்றம் நீதிபதில் லூசி மெக்கல்லம் உத்தரவிட்டுள்ளார்