ஆதார் கார்டை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு போட்ட மம்தா பானர்ஜி

ஆதார் கார்டை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு போட்ட மம்தா பானர்ஜி

சமீபத்தில் தனது மொபைல் போனை ஆதார் எண்ணுடன் இணைக்க முடியாது என்று பகிரங்கமாக அறிவித்த மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி, தற்போது இதுகுறித்து வழக்கு ஒன்றை சுப்ரீம் கோர்ட்டில் பதிவு செய்துள்ளார்.

மேற்கு வங்க மாநிலத்தின் மூலம் பதிவு செய்யப்பட்ட இந்த வழக்கில் ‘அரசின் நலத்திட்டங்களுக்கு ஆதார் அட்டை கேட்பது அவசியம் என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும், இதற்கு தடை விதிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டது.

இந்த வழக்கு வரும் 30ஆம் தேதி சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு எடுத்து கொள்ளவிருக்கின்றது. நீதிபதிகள் ஏ.கே.சிக்ரி மற்றும் அசோக்பூஷன் ஆகியோர் கொண்ட அமர்வு முன் விசாரணை செய்யப்படவுள்ள இந்த வழக்கில் மேற்குவங்க மாநிலத்திற்கு சாதகமான தீர்ப்பு வருமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்

Leave a Reply