ஆந்திராவில் நடிகை ரோஜாவுக்கு துணை முதல்வர் பதவியா?
15ஆந்திரா வரலாற்றில் முதல் முறை: 5 துணை முதல்வர்களை நியமிக்க முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி முடிவு செய்துள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது
ஆந்திராவில் உள்ள பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் , பிற்படுத்தப்பட்டோர், மைனாரிட்டி மற்றும் காப்பு பிரிவு என 5 சமுதாயத்துக்கும் தலா ஒரு துணை முதல்வர் பதவி அளிக்க முதல்வர் முடிவு செய்திருப்பதாகவும், இதுகுறித்து குண்டூர் மாவட்டம் தடேப்பள்ளியில் உள்ள அவரது வீட்டில் கட்சித் தலைவர்களுடன் ஜெகன் மோகன் ரெட்டி ஆலோசனை நடத்தி வருவதாகவும் செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன.
ஒட்டுமொத்த மாநிலமும், அரசின் செயல்பாடுகளை உற்று நோக்கிக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில், அரசின் நிர்வாகச் செயல்பாடுகளில் பல்வேறு மாற்றங்களை நிகழ்த்த ஜெகன்மோகன் ரெட்டி முடிவு செய்துள்ளார்.
இந்த ஐந்து துணை முதல்வர்களில் ஒருவர் நடிகை ரோஜாவாக இருக்க வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது