ஆந்திரா தர்காவில் ஏ.ஆர்.ரஹ்மான் சிறப்பு பிரார்த்தனை
பிரபல இசையமைப்பாளரும் ஆஸ்கார் விருது வென்றவருமான ஏஆர் ரஹ்மான் அவர்கள் அவ்வப்போது முக்கிய தர்காகளுக்கு சென்று சிறப்பு பிரார்த்தனை செய்து வருவது வழக்கமாக இருந்து வருகிறது
இந்த நிலையில் ஆந்திர மாநிலம் நெல்லூர் அருகே உள்ள கொசுமூரு மஸ்தான்வாலி தர்காவில் வருடாந்திர மகா உற்சவம் நடைபெற்றது. இதனையடுத்து இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் இங்கு சிறப்பு பிரார்த்தனை மேற்கொண்டார். ஏ.ஆர்.ரஹ்மான் வருகையை அறிந்த தர்கா நிர்வாகம் அவருக்கு, மேள, தாளங்கள் முழங்க சிறப்பான வரவேற்பை அளித்தது.
ஏ.ஆர். ரஹ்மான் தற்போது மணிரத்னம் இயக்கி வரும் ‘பொன்னியின் செல்வன்’, கமல்ஹாசனின் ‘தலைவன் இருக்கின்றான்’, ‘விக்ரம் 58’, சிவகார்த்திகேயன் 14’ உள்பட சுமார் பத்து திரைப்படங்களுக்கு இசையமைத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது