ஆன்லைனில் பட்டாசு விற்பனை தடை: சென்னை ஐகோர்ட் உத்தரவு
ஆன்லைனில் பட்டாசு விற்பனை செய்ய தடை விதிக்க வேண்டும் என்று தொடரப்பட்ட வழக்கு ஒன்றின் விசாரணை இன்று நடைபெற்றது.
இந்த வழக்கை விசாரணை செய்த சென்னை உயர்நீதிமன்றம் ஆன்லைனில் பட்டாசு விற்பனை செய்ய தடை விதித்து உத்தரவு பிறப்பித்தது.
முன்னதாக ஆன்லைனில் 1000 வாலா வெறும் 6 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும் என்று, இந்த சலுகை முதலில் ஆர்டர் செய்யும் 1000 பேருக்கு மட்டுமே என்றும் விளம்பரம் செய்யப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.