ஆபத்தை விளைவிக்கும் மெழுகு தடவிய ஆப்பிள்

ஆபத்தை விளைவிக்கும் மெழுகு தடவிய ஆப்பிள்

ஆப்பிள் என்றாலே உடலுக்கு சக்தி தரவல்லது என்றுதான் அனைவருக்கும் தெரியும். குறிப்பாக குழந்தைகள் ஆப்பிளை விரும்பி சாப்பிடுவதுண்டு. ஆனால் ஒருசிலர் ஆப்பிள் நீண்ட நாள் கெட்டு போகாமல் இருக்க அதன் மீது மெழுகை தடவுவதாகவும் அவ்வகை ஆப்பிளை சாப்பிடுவதால் உடலுக்கு பலதீங்குகளை ஏற்படுத்தி ஆபத்தை ஏற்படுத்தி வருவதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது

ஆப்பிள்களை ராட்சத தொட்டியில், இளஞ்சூட்டுடன் கூடிய மெழுகு கலவையில் ஆப்பிள் பழங்கள் கொட்டப்படுகின்றன. சிறிது நேரத்தில் அந்த பழங்களை எடுத்து துணியால் துடைத்து, அதனை அட்டை பெட்டிகளில் அழகாக அடுக்கி பல்வேறு இடங்களுக்கு விற்பனைக்காக அனுப்பி வைக்கப்படுகிறது. இந்த பழங்கள், 15 நாட்களுக்கு மேல் கெட்டுப்போகாமல் இருக்கும்.

மெழுகு முலாம் பூசப்பட்ட இந்த பழங்கள், பார்த்தவுடனேயே சாப்பிட தூண்டும் வகையில் பளிச்சென்று காட்சி அளிக்கும். ஆப்பிள் பழங்களின் தோல் பகுதியை நகங்களால் சுரண்டி பார்த்தால் மெழுகு துகள்கள் ஒட்டியிருப்பது தெரியவரும். வயிறுக்குள் செல்லும் மெழுகு, நமக்கு பல்வேறு நோய்களை கொண்டு வந்து சேர்க்கிறது. குறிப்பாக செரிமானக்கோளாறு, நெஞ்சு எரிச்சல், குடல் புற்றுநோய், கல்லீரல் பாதிப்பு ஆகியவை ஏற்பட்டு உயிருக்கு உலை வைக்கும் அளவுக்கு சென்று விடுகிறது. இது, மெல்ல கொல்லும் விஷம் போன்றது என்று உணவு பாதுகாப்புத்துறையினர் எச்சரிக்கின்றனர்.

Leave a Reply