ஆபாசமாக பேசி வீடியோக்களை வெளியிட்டு கலாச்சாரத்தை சீரழிப்பதாக டிக்டாக் புகழ் ஜி.பி.முத்து மற்றும் ரவுடி பேபி சூர்யா உள்ளிட்ட 4 பேர் மீது காவல்துறையினர்களிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது,
ஆபாசமாக பேசும் வீடியோக்களை வெளியிட்டு வரும் சூழலில் ஜிபி முத்து மீது காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு எம்.எம்.கே.முகைதீன் என்பவர் புகார் அளித்துள்ளார்.
ஜிபி முத்து மட்டுமின்றி திருச்சி சாதனா, பேபி சூர்யா, சிக்சர் என்ற சிக்கந்தர் உள்ளிட்ட சிலரும் ஆபாசமாகவும் அருவருக்கத்தக்க வகையில் பல்வேறு வீடியோக்களை பதிவேற்றம் செய்துள்ளதாகவும், இவர்களின் உடல் பாவணைகளும் பேச்சுக்களும் தமிழ்நாட்டில் கலாச்சாரம் மற்றும் சமூக சீரழிவை ஏற்படுத்துவதாகவும், இதை காணும் சிறுவர், சிறுமிகளின் மனதை பாதிப்படைய செய்யும் என்றும் புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளது.