ஆப்பிள் பழத்திற்கும் ஆப்பிள் நிறுவனத்திற்கும் வித்தியாசம் தெரியாத செய்தியாளர்
பாகிஸ்தான் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் ஆப்பிள் நிறுவனத்தின் தொழில் வளர்ச்சி குறித்து விருந்தினர் பேசிக் கொண்டிருக்கும் போது பேட்டி எடுத்த பெண் செய்தி வாசிப்பாளர், ஆமாம் பலவகை ருசியான ஆப்பிள்கள் நல்ல வருமானத்தைத் தந்துக் கொண்டிருக்கின்றன என்று கூறியது பெரும் சிரிப்பலைகளை ஏற்படுத்தியது.
தான் கூறுவது ஆப்பிள் பழத்தைப் பற்றியல்ல, ஆப்பிள் நிறுவனத்தைப் பற்றி என்று விருந்தினர் திருத்தினார். இச்சம்பவத்தையடுத்து அந்த பெண் செய்தியாளரை நெட்டிசன்கள் வறுத்து எடுத்து விட்டனர்.