ஆமை புகுந்த வீடு விளங்காது: ‘மங்காத்தா’ தயாரிப்பாளரின் சர்ச்சை டுவீட்

ஆமை புகுந்த வீடு விளங்காது: ‘மங்காத்தா’ தயாரிப்பாளரின் சர்ச்சை டுவீட்

அஜித் நடித்த மங்காத்தா உள்ளிட்ட திரைப்படங்களை தயாரித்தவரும் மு.க.அழகிரியின் மகனுமான தயாநிதி அழகிரி சமீபத்தில் ஒரு டுவீட்டை பதிவு செய்துள்ளார். அதில் ‘ஒரு வீடு ஒரு அம்புக்குறி ஒரு ஆமை’ படத்தை பதிவு செய்து ‘ஆமை புகுந்த வீடு விளங்காது’ என்று குறிப்பிட்டுள்ளார்.

திமுக கூட்டணியில் வைகோ இணைந்ததையே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளதாக தெரிகிறது. மேலும் தேர்தலுக்கு பின் வைகோ தனது கட்சியை திமுகவுடன் இணைத்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

தயாநிதி அழகிரியின் இந்த டுவீட் சர்ச்சைக்குள்ளாகியுள்ளது. வைகோவின் ஆதரவாளர்கள் இந்த டுவீட்டுக்கு கடும் கண்டங்களை தெரிவித்து வருகின்றனர்.

Leave a Reply