குவியும் பாராட்டு
சாலை விபத்தில் பலத்த காயமடைந்த ஒருவரை கொண்டு சென்ற ஆம்புலன்ஸ் செல்வதற்காக தனது பாதுகாப்பு அணிவகுப்பு வாகனங்களை நிறுத்திய முதல்வருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது
ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி அவர்கள் நேற்று விஜயவாடா விமான நிலையத்திலிருந்து தனது வீட்டிற்கு சென்றுகொண்டிருந்தார்.
அப்போது அந்த வழியாக சாலை விபத்தில் பலத்த காயமடைந்த ஒருவர் விஜயவாடாவில் இருக்கும் இஎஸ்ஐ மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸில் கொண்டு செல்லப்பட்டார்.
உடனே முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி, ஆம்புலன்ஸ் செல்வதற்காக தனது பாதுகாப்பு வாகனங்களை நிறுத்தி வழிவிட்டார். இந்த சம்பவத்தை அடுத்து ஆந்திர முதல்வருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.