ஆம் ஆத்மியுடன் கூட்டணி: பேச்சுவார்த்தை நடத்த ராகுல்காந்தி ஒப்புதல்

ஆம் ஆத்மியுடன் கூட்டணி: பேச்சுவார்த்தை நடத்த ராகுல்காந்தி ஒப்புதல்

பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதாவுக்கு எதிராக எதிர்க்கட்சிகளை ஒன்று இணைக்கும் பணியில் காங்கிரஸ் ஈடுபட்டுள்ளது.

டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில் ஆம் ஆத்மி கட்சி ஆட்சி நடைபெற்று வரும் நிலையில் அந்த கட்சி பா.ஜனதா, காங்கிரசுக்கு எதிராக செயல்பட்டு வருகிறது. இருப்பினும் பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதாவை வீழ்த்த காங்கிரசுடன் கூட்டணி அமைக்க கெஜ்ரிவால் விருப்பம் தெரிவித்தார். ஆனால் காங்கிரஸ் கட்சி, ஆம் ஆத்மியுடன் கூட்டணி வைக்க ஆர்வமில்லாமல் இருந்தது.

இந்த நிலையில் ஆம் ஆத்மி கட்சியுடன் காங்கிரஸ் கூட்டணி அமைக்க முடிவு செய்துள்ளது. இதற்காக அந்த கட்சியுடன் பேச்சுவார்த்தை நடத்த காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி ஒப்புதல் அளித்து உள்ளார்.

இது தொடர்பாக டெல்லி மாநில காங்கிரஸ் தலைவர்களில் ஒருவர் கூறும்போது “ஆம் ஆத்மியுடன் நாங்கள் நல்ல நிலையில் உள்ளோம். பாராளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்படுவதற்கு முன்பு ஆம் ஆத்மியுடன் கூட்டணி இறுதி முடிவாகும்” என்றார்.

Leave a Reply