‘ஆரம்பம்’ நடிகைக்கு ஒப்பந்தமான விஜய் காஸ்ட்யூம் டிசைனர்.
அஜித்தின் ‘ஆரம்பம்’ மற்றும் விஜய்யின் துப்பாக்கி’ உள்பட பல படங்களில் நடித்த அக்ஷரா கவுடா தற்போது ஜெயம் ரவி, ஹன்சிகா நடித்து வரும் ‘போகன்’ படத்தில் இரண்டாவது நாயகியாக நடித்து வருகிறார்.
இந்த படத்தில் ஒரு குத்துப்பாட்டு நடனம் ஆடவுள்ள அக்ஷராவுக்கு காஸ்ட்யூம் டிசைனராக சத்யா என்பவரை படத்தின் இயக்குனர் லக்ஷ்மணன் ஒப்பந்தம் செய்துள்ளார். சத்யா ஏற்கனவே விஜய்யின் ‘தெறி’ படத்திற்கு காஸ்ட்யூம் டிசைன் செய்தவர். அதுமட்டுமின்றி விஜய் நடிக்கவுள்ள அடுத்த படமான ‘விஜய் 60’ படத்திற்கு இவர்தான் காஸ்ட்யூம் டிசைனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இயக்குனர் லக்ஷ்மணன் தனது முந்தைய படமான ‘ரோமியோ ஜூலியட்’ படத்தை போலவே காதல், செண்டிமெண்ட் கலந்த படமாக ‘போகன்’ படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் ஒரு முக்கிய கேரக்டரில் ‘தனி ஒருவன்’ வில்லன் அரவிந்தசாமி நடிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.