ஆரோக்கியமான எடை அதிகரிக்க… 14 வழிகள்

ஆரோக்கியமான எடை அதிகரிக்க… 14 வழிகள்

7அனைவரும்தான் சாப்பிடுகிறோம். ஆனால், சிலர் மட்டும் எப்போதும் ஒல்லியாகவே உள்ளனர். “தீவிரமா மாப்பிள்ளை பார்த்துட்டு இருக்கோம். ஆனால், இவ இப்படி ஈர்க்குச்சி மாதிரி இருக்கா… எவ்வளவு சாப்பிட்டாலும் உடம்புலயே ஒட்ட மாட்டேங்குது” எனச் சில பெற்றோர் புலம்புவார்கள். நவீன வாழ்வில் எடை அதிகரிப்பது ஒரு பெரிய பிரச்னை என்றால், உயரத்துக்கு ஏற்ற எடை இல்லாமல், ஒல்லியாக இருப்பது சிலரின் பிரச்னை. ஒல்லியாக இருப்பதற்கு, ஹார்மோன் குறைபாடுகள் முதல் மரபியல் வரை நிறையக் காரணங்கள் இருக்கின்றன. இதில், சாப்பிடும் முறை, அதன் தரம், போதுமான ஊட்டச்சத்துக்கள் இன்மை போன்றவையும் முக்கியமான காரணங்களே. ஆரோக்கியமுறையில் உடல் எடையை அதிகரிக்கப் பின்பற்ற வேண்டிய வழிகள் இங்கே…

வாக்கிங், ஜாகிங், சைக்கிளிங், ஸ்விம்மிங் என, அவரவருக்குப் பொருத்தமான உடற்பயிற்சி செய்யலாம். வாரத்தில் ஐந்து நாட்களுக்கு, தினமும் 40 நிமிடங்கள் உடற்பயிற்சி செய்வதைக் கட்டாயமாக்க வேண்டும்.

மிளகு, இஞ்சி, பட்டை, சீரகம் போன்ற செரிமானத்தை மேம்படுத்தி, பசியைத் தூண்டும் மசாலா சுவையூட்டிகளை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

பெரிய உணவுத்தட்டைத் தேர்ந்தெடுக்கவும். உணவைச் சாப்பிடும் முன், தங்களுக்குத் தேவையானதை சீராக அந்தத் தட்டில் அடுக்கிவைத்துச் சாப்பிட வேண்டும்.

உடல் எடை அதிகரிக்க கலர்ஃபுல் உணவுகளைத் தேர்ந்தெடுக்க வேண்டும். பச்சை நிறத்தில் கீரை, சிவப்பு நிறத்தில் சிவப்பரிசி, மஞ்சள் நிறத்தில் பருப்பு, நெய், பிரவுன் நிறத்தில் ரசம், மஞ்சளும் கறுப்பும் கலந்த வேகவைத்த மிளகு, உருளைக்கிழங்கு எனப் பல நிறங்களில் சாப்பிடுவதால், சாப்பிடும் எண்ணம் தூண்டப்பெற்று, நன்கு சாப்பிட முடியும்.

வாசனையான உணவுகளைச் சாப்பிடலாம். கறிக் குழம்பு, தேங்காய்ப் பால் ஊற்றிய புலாவ், மிளகு சேர்த்த வறுவல், இஞ்சி சேர்த்த தயிர் சாதம் போன்ற மணமூட்டிகள் நிறைந்த உணவுகளைச் சாப்பிடலாம்.

ஒரே உணவைச் சாப்பிடுவதால் சலிப்பு ஏற்படலாம். அதனால், ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமாகச் சாப்பிடவும்.

உடல் எடை அதிகரிக்க வேண்டும் என்பதற்காக, துரித உணவுகளைத் தேர்ந்தெடுக்கக் கூடாது. கட்டாயமாக, பீட்ஸா, பர்கரைத் தவிர்க்கவும். இவற்றைச் சாப்பிடுவதால், கெட்ட கொழுப்பு உடலில் அதிகரிக்குமே தவிர, தசைகளில் சேராது, வலுவும் பெறாது.

உப்பு கலந்த உணவுகள், ரெடிமேட் உணவுகள், ஸ்வீட்ஸ், எண்ணெயில் பொரித்த உணவுகளை அவசியம் தவிர்க்க வேண்டும்.

சாப்பிட்ட பிறகு, தினமும் ஒரு வாழைப்பழம் சாப்பிட வேண்டும். அதனுடன், சாத்துக்குடி, எலுமிச்சை, ஆரஞ்சுப் பழச்சாறுகளும் பருகலாம்.

உருளை, கருணை போன்ற வேர்க்கிழங்குகளைத் தினமும் ஒரு கப் அளவுக்குச் சாப்பிட வேண்டும். அசைவ உணவுகளை வாரம் மூன்று நாட்கள் சாப்பிடலாம்.

கஞ்சி, தோசை, வடை எனக் கேழ்வரகை ஏதாவது ஒரு வகையில் அடிக்கடி சாப்பிட வேண்டும்.

உலர் பழங்களான அத்தி, காய்ந்த திராட்சை, பாதாம், முந்திரி, பிஸ்தா, வால்நட், பேரீச்சை ஆகியவற்றைக் கலந்து, தினமும் ஒரு கப் அளவுக்குச் சாப்பிடலாம்.

சோயா பீன்ஸ், ராஜ்மா, கொண்டைக்கடலை, நிலக்கடலை ஆகியவற்றை மாலை நேரத்தில் ஒரு கப் சாப்பிடலாம்.

போதுமான தூக்கம் இல்லாவிட்டால், பசியும் இருக்காது. சாப்பாட்டை உண்ணும் அளவு குறைந்துபோகும் எனவே, தினசரி நிறைவான தூக்கம் அவசியம்.

Leave a Reply