ஆர்டர் செய்தது சாம்சங் போன்: வந்ததோ வெறும் அட்டைப்பெட்டி!
கடந்த சில ஆண்டுகளாகவே பொதுமக்கள் பலர் ஆன்லைனில் அதிக அளவில் வர்த்தகம் செய்து வருகின்றனர். மளிகை சாமான்கள் முதல் மொபைல் போன், லேப்டாப் வரை ஆன்லைனில் பெரிய நிறுவனங்களிடம் ஆர்டர் செய்து வீட்டுக்கே வரவழைத்து வாங்கிக் கொண்டிருக்கின்றனர் என்பது தெரிந்ததே
இந்த நிலையில் ஒரு இளைஞர் சாம்சங் நிறுவனத்தின் மொபைல் போன் ஒன்றை ஆர்டர் ஆன்லைனில் செய்துள்ளார். ஆர்டர் செய்த அந்த போனவருக்கு டெலிவரியும் செய்யப்பட்டுள்ளது
அந்த பார்சலை ஆசையுடன் அவர் பிரித்து பார்த்த போது அந்த பாக்ஸில் மொபைல் போன் இல்லை, வெறும் பாக்ஸில் சார்ஜர் மட்டுமே இருந்தது. அவர் இதனை வீடியோ ஆதாரத்துடன் சமூக வலைதளங்களில் பதிவு செய்துள்ளார்
https://twitter.com/Ferozeshaja/status/1185079923280510976