ஆர்.எஸ்.எஸ். உடை மாற்றத்திற்கு தனது மனைவியே காரணம்: லாலு பிரசாத் யாதவ்
காக்கி நிற அரைக்கால் சீருடையை காலத்திற்கேற்ப மாற்றிக்கொள்ள ஆர்.எஸ்.எஸ். இயக்கம் முடிவு எடுத்ததற்கு தனது மனைவி ராப்ரிதேவியே காரணம் என்று ராஷ்டீரிய ஜனதா தளம் தலைவர் லாலு பிரசாத் யாதவ் கூறியுள்ளார்.
தனது மனைவி ராப்ரிதேவி கடந்த ஜனவரியில், ஆர்.எஸ்.எஸ். தொண்டர்கள் அரைகால் சட்டை அணிந்து பொது இடங்களில் கூச்சமில்லாமல் அலைவதாக விமர்சித்தார். ராப்ரிதேவியின் விமர்சனம்தான் ஆர்.எஸ்.எஸ். உடை மாற்றம் முடிவுக்கு காரணம்.
உடை அணியும் முடிவு மாற்றத்தைப்போல், ஆர்.எஸ்.எஸ். மனநிலையிலும் மாற்றம் தேவை என்று டிவிட்டரில் லாலு பிரசாத் யாதவ் கூறியுள்ளார்.