ஆர்.கே.நகர் தொகுதியை மோடி தத்தெடுப்பார்: தமிழிசை

ஆர்.கே.நகர் தொகுதியை மோடி தத்தெடுப்பார்: தமிழிசை

சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் தேர்தல் பிரச்சாரம் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் மாநில கட்சிகளுக்கு இணையாக தேசிய கட்சியான பாஜக தலைவர்களும் சூறாவளி பிரச்சாரம் செய்து வருகின்றனர். குறிப்பாக தமிழக பாஜக தலைவர் தமிழிசை செளந்திரராஜன் தீவிர பிரச்சாரம் செய்து வருகிறார்

இந்த நிலையில் சமீபத்தில் ஆர்.கே.நகரில் ஒரு பகுதியில் உள்ள மக்களிடம் பேசிய தமிழிசை, ‘ஆர்.கே நகரில் பாஜக வெற்றி பெற்றால் மோடி இந்த தொகுதியை தத்தெடுத்து கொள்வார் என்று கூறினார். மேலும் ஆர்.கே.நகரில் ஒருசில கட்சிகள் பணப்பட்டுவாடா செய்து வருவதாகவும், இதனை தடுக்க தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறினார்

மேலும் பணப்பட்டுவாடாவைத் தடுக்காவிட்டால் ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் நடக்காது என்றும் அவர் எச்சரித்தார். ஏற்கனவே ஆர்.கே.நகர் தேர்தல் ரத்தாக வாய்ப்பு இருப்பதாக பாஜகவின் எஸ்.வி.சேகர் தனது டுவிட்டரில் கூறியுள்ள நிலையில் தற்போது தமிழிசையின் எச்சரிக்கையையும் வைத்து பார்க்கும்போது இந்த தொகுதியில் தேர்தல் நடக்குமா? என்ற சந்தேகம் அனைவருக்கும் ஏற்பட்டுள்ளது.

Leave a Reply