ஆறுமுகசாமி ஆணையத்தில் ஆஜராகாத அப்பல்லோ மருத்துவர்கள்

ஆறுமுகசாமி ஆணையத்தில் ஆஜராகாத அப்பல்லோ மருத்துவர்கள்

ஆறுமுகசாமி ஆணையம விசாரணைக்கு அப்பல்லோ மருத்துவர்கள் இன்றும் ஆஜராகவில்லை. உச்சநீதிமன்ற மனுவை மேற்கோள்காட்டி ஆஜராக விலக்கு கேட்டு ஆணையத்திற்கு கடிதம் அனுப்பியுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை செய்து வரும் ஆறுமுகச்சாமி ஆணையத்திற்கும் அப்பல்லோ நிர்வாகத்திற்கும் இடையே சமீபத்தில் கருத்து மோதல் நடந்ததாக கூறப்படுகிறது. மருத்துவ சிகிச்சைகள் குறித்த கேள்விகளை மருத்துவ நிபுணர்கள் இல்லாத ஆறுமுகச்சாமி விசாரணை ஆணையம் கேட்க முடியாது என அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் ஏற்கனவே தெரிவித்திருந்தது. மேலும் ஜெயலலிதாவுக்கு அப்பல்லோவில் வழங்கப்பட்ட சிகிச்சைகள் குறித்து விசாரிக்க 21மருத்துவ நிபுணர்கள் கொண்ட குழுவை அமைக்க உத்தரவிட கோரி அப்பல்லோ நிர்வாகம் ஏற்கனவே வழக்கு தொடர்ந்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் இன்று ஆஜராக அப்பல்லோ மருத்துவர்களுக்கு ஆணையத்தின் தரப்பில் சம்மன் அனுப்பப்பட்டிருந்த நிலையில் மருத்துவர்கள் ஆஜராகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply