ஆறுமுகசாமி ஆணையத்தில் துணை முதல்வர் ஆஜராவது எப்போது?
துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பிப்.28-ம் தேதி ஆஜராக ஆறுமுகசாமி ஆணையம் சம்மன் அனுப்பியுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை செய்து வரும் ஆறுமுகசாமி ஆணையம் இதுவரை நூற்றுக்கணக்கானோர்களை விசாரணை செய்துள்ள நிலையில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அவர்களையும் விசாரணை செய்ய முடிவு செய்தது
இந்த நிலையில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பிப்.28-ம் தேதி ஆஜராக தற்போது சம்மன் அனுப்பபட்டுள்ளது. மேலும் அப்பல்லோ மருத்துவர்கள் 7 பேர் பிப்ரவரி 27-ம் தேதி ஆஜராகவும் ஆறுமுகசாமி ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.