ஆற்றுப்பாலத்தில் காதலன் – காதலி: போதை இளைஞர்களால் ஏற்பட்ட விபரீதம்

ஆற்றுப்பாலத்தில் காதலன் – காதலி: போதை இளைஞர்களால் ஏற்பட்ட விபரீதம்

காதலர்கள் யாரும் இல்லாத இடத்தில் அமர்ந்து தங்களது காதலை வளர்த்து கொள்வது வழக்கமான ஒன்றுதான். இந்த நிலையில் திருச்சி கொள்ளிடம் ஆற்றின் பாலத்தில் ஜீவித் என்ற 25 வயது இளைஞர் தனது காதலியுடன் பேசிக்கொண்டிருந்தார்.

அப்போது போதை இளைஞர்கள் திடீரென வந்து காதலர்களை மிரட்டியதாக தெரிகிறது. இதில் பேலன்ஸ் தவறி ஜீவித் ஆற்றில் தவறி விழுந்தார். ஆற்றில் தவறிவிழுந்த இளைஞர் ஜீவித் மாயமானதை அடுத்து அவரை தேடும் பணியில் மீட்புப்படையினர் தீவிரமாக உள்ளனர்.

இந்த நிலையில் காதலர்களை மிரட்டிய போதை வாலிபர்களை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். பெற்றோர்களுக்கு தெரியாமல் காதலிக்கும் காதலர்கள் ஆள்நடமாட்டம் இல்லாத பகுதிக்கு செல்ல வேண்டாம் என இதன்மூலம் தெரிய வருகிறது

Leave a Reply