ஆளுங்கட்சிக்கு ஆதரவாகவே கருத்துக்கணிப்புகள் இருக்கும்: சி.ஆர்.சரஸ்வதி
தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் எப்பொழுதுமே ஆளுங்கட்சிக்கு ஆதரவாக தான் இருக்கும் என அமமுக கட்சியின் பிரமுகர் சி.ஆர்.சரஸ்வதி தெரிவித்துள்ளார்.
பொதுமக்கள் எப்போது வாக்களித்துவிட்டு வெளியே வரும்போது தாங்கள் யாருக்கு வாக்களித்தோம் என்பதை கூற மாட்டார்கள் என்றும் அப்படியே அவர்கள் கூறினாலும் அது சரியானதாக இருக்காது என்று கூறிய சி.ஆர்.சரஸ்வதி, தேர்தலுக்கு முந்தைய கருத்துக்கணிப்புகள் பெரும்பாலும் தவறானதாகவே இருந்துள்ளது என்பதுதான் உண்மை என்று சி.ஆர்.சரஸ்வதி தெரிவித்துள்ளார்