ஆளுனருடன் உள்துறை செயலர், ஐகோர்ட் தலைமை நீதிபதி சந்திப்பு

ஆளுனருடன் உள்துறை செயலர், ஐகோர்ட் தலைமை நீதிபதி சந்திப்பு

தமிழகத்தில் அசாதாரண சூழ்நிலையை எதிர்கொள்ள தயார் நிலையில் இருக்கும்படி டிஜிபி ராஜேந்திரன் சற்றுமுன்னர் உத்தரவிட்டிருந்த நிலையில் இதுவொரு வழக்கமான அறிவிப்புதான். இதை வைத்து வதந்தி பரப்ப வேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டார். இருப்பினும் மக்களிடம் எழுந்துள்ள அச்ச உணர்வு குறைந்தபாடில்லை

இந்த நிலையில் சற்றுமுன்னர் ஆளுநர் வித்யாசாகர் ராவுடன் உள்துறை செயலர் நிரஞ்சன் மார்டி மற்றும் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி ஆகியோர் சந்தித்துள்ளனர்.

இந்த சந்திப்பு எதற்காக என்பது குறித்த தகவல் வெளிவராததால் தமிழகம் முழுவதும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Leave a Reply