ஆஸ்திரேலியாவில் வெடித்து சிதறிய சாம்சங் ஸ்மார்ட்போன்.
பெரும் எதிர்பார்ப்புடன் கடந்த ஆகஸ்ட் மாதம் 19ஆம் தேதி வெளியான சாம்சங் கேலக்சி நோட் 7 ஸ்மார்ட்போன் உலகின் பல பகுதிகளில் சார்ஜ் போடும்போது வெடித்து சிதறுவதாக தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில் இந்தவகை போன்களை சந்தையிலிருந்து திரும்ப பெற்றுக் கொள்வதாக சாம்சங் நிறுவனம் சமீபத்தில் அறிவிப்பு செய்திருந்தது. இந்நிலையில் ஆஸ்திரேலியாவில் சாம்சங் கேலக்சி நோட் 7 ஸ்மார்ட்போன் வெடித்து சிதறியதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.
ஆஸ்திரேலியாவின் விக்டோரியா மாகாணத்தைச் சேர்ந்தவர் தம் ஹுவா என்பவர் மெல்போர்ன் நகரத்துக்கு சுற்றுப்பயணம் செய்த பொழுது அங்குள்ள ஹோட்டல் ஒன்றில் அறை எடுத்து தங்கியிருந்தார். அங்கு இரவு படுக்கும் பொழுது தன்னுடைய சாம்சங் கேலக்சி நோட் 7 ஸ்மார்ட்போனுக்கு ‘சார்ஜ்’ போட்டு விட்டு தூங்கிவிட்டார்
அதிகாலை அவர் உறங்கிக் கொண்டிருக்கும் திடீரென பெரும் சத்தத்துடன் அவரது போன் வெடித்துச் சிதறியுள்ளது. இந்த விபத்து காரணமாக அவரது படுக்கையறை விரிப்பு மற்றும் தரை கம்பளம் ஆகியவை எரிந்து சேதமானதால் 1300 டாலர் அவர் ஓட்டலுக்கு அபராதம் செலுத்தியுள்ளார்.
இதுகுறித்து தம் ஹுவா சாம்சங் நிறுவனத்தை தொடர்பு கொண்ட பொழுது ஆஸ்திரேலியாவில் இது போல நடப்பது இதுதான் முதல்முறை என்று வருத்தம் தெரிவித்த அந்நிறுவனம், ஹோட்டல் நிர்வாகத்துக்கு ஹுவா செலுத்த வேண்டிய 1300 ஆஸ்திரேலிய டாலருக்கு தான் பொறுப்பேற்றுக் கொள்வதாக கூறியுள்ளது.