ஆஸ்திரேலியா: முழுக்க முழுக்க மணலால் கட்டப்பட்ட உலகின் முதல் விடுதி
செங்கல், கல் இல்லாமல் முழுக்க முழுக்க மணலை மட்டுமே பயன்படுத்தி கட்டப்பட்ட உலகின் முதல் தங்கும் விடுதி ஆஸ்திரேலியாவில் இன்று திறக்கப்படுகிறது.
சுமார் 24 டன்கள் மணல் மற்றும் கலவைகள் மட்டுமே பயன்படுத்தப்பட்ட இந்த தங்கும் விடுதி மூன்றே வாரங்களில் கட்டிமுடிக்கப்பட்டு சாதனை செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
தங்க நிறத்தில் ஜொலிக்கும் இந்த தங்கும் விடுதியில் எட்டு படுக்கை அறைகளும், ஒரு பிரைவைட் அறையும் உண்டு. இந்த கட்டிடத்தை திரைப்பட டிசைனர் ஒருவரும் கட்டிட கலை நிபுணர் ஒருவரும் டிசைன் செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது