ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: இறுதி போட்டிக்கு தகுதி பெற்றார் நவோமி ஒசாகா
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டீயில் நேற்று நடைபெற்ற பெண்களுக்கான ஒற்றையர் பிரிவு முதலாவது அரையிறுதி ஆட்டத்தில் பெட்ரா கிவிட்டோவா வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறினார். அதேபோல் 2-வது அரையிறுதி ஆட்டத்தில் ஜப்பானின் நவோமி ஒசாகா செக் குடியரசின் கரோலினா பிளிஸ்கோவாவை 6-2, 4-6, 6-4 என்ற செட் கணக்கில் வீழ்த்தினார். இதனையடுத்து அவர் இறுதி போட்டிக்கு தகுதி பெற்றார்.
இந்த நிலையில் இன்று இந்திய நேரப்படி மதியம் 2 மணிக்கு நடைபெறும் இறுதிப் போட்டியில் நவோமி ஒசாகா – பெட்ரா கிவிட்டோவா பலப்பரீட்சை நடத்துகிறார்கள்.