ஆா்.கே.நகா் தோ்தல் முடிவு எதிரொலி: முதல்வா் தலைமையில் அவசர ஆலோசனைக் கூட்டம்

ஆா்.கே.நகா் தோ்தல் முடிவு எதிரொலி: முதல்வா் தலைமையில் அவசர ஆலோசனைக் கூட்டம்

ஆா்.கே. நகா் இடைத் தோ்தலில் தோல்வியடைந்ததைத் தொடா்ந்து முதல்வா் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அ.தி.மு.க.வின் அவரச ஆலோசனைக் கூட்டம் கட்சி தலைமை அலுவலகத்தில் இன்று நடைபெறுகிறது.

நேற்று வெளியான ஆா்.கே.நகா் இடைத் தோ்தல் முடிவுகள் தமிழகம் முழுவதிலும் பெரும் அதிா்ச்சியை ஏற்படுத்தியது. ஏனெனில் சுயேட்சை வேட்பாளா் டிடிவி தினகரன் தொகுதியின் ஒட்டுமொத்த வாக்குகளில் 52.5 சதவீதம் வாக்குகளை பெற்று சாதனை படைத்துள்ளார்.

இந்நிலையில் அ.தி.மு.க.வின் அவசர ஆலோசனை கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இன்று காலை 11 மணிக்கு அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் இந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெறும் என்றும், அவசர ஆலோசனை கூட்டத்தில் அமைச்சா்கள், கட்சி நிர்வாகிகள் கலந்து கொள்வார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆா்.கே.நகா் இடைத்தோ்தல் முடிவுகள் நேற்று வெளியான நிலையில், இன்று அவசர கூட்டம் கூட்டப்படுகிறது. எனவே இன்றைய கூட்டத்தில் மதுசூதனனின் தோல்வி குறித்து விவாதிக்கப்படலாம் என்றும் தெரிகிறது.

Leave a Reply