இக்னோ’ பல்கலை. படிப்புகளுக்கு விண்ணப்பிக்க போகிறீர்களா? இதோ முக்கிய விபரங்கள்

இக்னோ’ பல்கலை. படிப்புகளுக்கு விண்ணப்பிக்க போகிறீர்களா? இதோ முக்கிய விபரங்கள்

இந்திரா காந்தி திறந்தநிலைப் பல்கலைக் கழகத்தில் (இக்னோ) பட்டம், பட்டயப் படிப்புகளில் சேர டிச.31-ஆம் தேதி வரை மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும் நெசவுத் தொழிலாளர்கள், சிறைக் கைதிகள், திருநங்கைகளுக்கு கட்டண விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து பல்கலைக் கழகத்தின் சென்னை மண்டல இயக்குநர் ச.கிஷோர் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

இக்னோ பல்கலைக் கழகம் 2018 ஜனவரி சுற்றுக்கான மாணவர் சேர்க்கையைத் தற்போது தொடங்கியுள்ளது. நாடு முழுவதும் செயல்பட்டு வரும் இந்தப் பல்கலைக் கழகத்தில் 200 பாடத் திட்டங்கள் தற்போது வழங்கப்பட்டு வருகிறது.
இங்கு பெறும் பட்டம் மற்றும் பட்டயப் படிப்புகள் அனைத்தும் பல்கலைக் கழக மானியக் குழுவால் (யுஜிசி) அங்கீகரிக்கப்பட்டுள்ளன.

பிளஸ் 2 தகுதி இல்லாவிட்டாலும்… பள்ளிப் படிப்பை இடையில் நிறுத்தியவர்கள் மற்றும் 18 வயது நிரம்பியவர்கள் இக்னோ-வின் பட்ட ஆயத்த படிப்பின் மூலம் பட்டப்படிப்பு பயில வாய்ப்பளிக்கப்படுகிறது. அதாவது பிளஸ் 2 தகுதி இல்லாவிட்டாலும் 6 மாத பயிற்சி மூலம் கலை, அறிவியல் பட்டப் படிப்புகளில் சேரலாம்.

நெசவுத் தொழில் செய்பவர்களுக்கு ஆயத்த பாடம் மற்றும் கணினி எழுத்தறிவு பாடத் திட்டத்தில் சேர கட்டணம் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. அதேபோன்று திருநங்கைகள், சிறைச் சாலை கைதிகளுக்கு தொலைநிலைக் கல்வியை எடுத்துச் செல்லும் வகையில் அனைத்துப் பாடத் திட்டங்களுக்கும் கட்டண விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

எம்.பி.ஏ. படிக்க விண்ணப்பிக்கலாம்: மருத்துவமனை, தொழிற்சாலைகள் மற்றும் பன்னாட்டு நிறுவனங்களில் ஆலோசகராக பணியாற்ற முதுநிலை பட்டப் படிப்பான உளவியல் பாடத் திட்டம் உதவியாக இருக்கும். மேலும் பேரழிவு மேலாண்மை, இணைய குற்றவியல் சட்டம், சுற்றுலா செயல்பாட்டு ஆங்கிலம், மனித உரிமைகள் உள்ளிட்ட சான்றிதழ் படிப்புகள் கல்லூரி மாணவர்களுக்கு மதிப்பு கூடுதல் மற்றும் வேலைவாய்ப்பு ஆகியவற்றுக்கு வழிவகுக்கும்.

மேலாண்மையில் முதுநிலை பட்டப்படிப்பு (எம்பிஏ) சேர்க்கை நடைபெற்று வருகிறது. இதற்கு நுழைவுத்தேர்வு உண்டு. இதற்கான மாணவர் கையேடு மற்றும் நுழைவுத் தேர்வு விண்ணப்பத்தை சென்னையில் உள்ள இக்னோ மையத்தில் பெற்றுக் கொள்ளலாம்.

தொடர்பு கொள்ள… இது குறித்த கூடுதல் தகவல் பெற “இக்னோ’ மண்டல மையம், பெரியார் திடல், 84/1, ஈ.வி.கே. சம்பத் சாலை, வேப்பேரி, சென்னை, 600007 என்ற முகவரியில் நேரில் தொடர்பு கொள்ளலாம்.

மேலும் rcchennai@ignou.ac.in என்ற வலைதளம் மற்றும் 044- 26618438 என்ற தொலைபேசி ஆகியவற்றிலும் மாணவர்கள் தொடர்பு கொள்ளலாம்.

Leave a Reply