இங்க சிஸ்டம் சரியில்லையா? நீதிமன்றத்தின் கேள்விக்கு எஸ்வி சேகர் டுவீட்

இங்க சிஸ்டம் சரியில்லையா? நீதிமன்றத்தின் கேள்விக்கு எஸ்வி சேகர் டுவீட்

5 மற்றும் 8ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு தொடர்பான அரசாணையை ரத்து செய்யக் கோரி, வழக்கறிஞர் லூயிஸ் என்பவர் தாக்கல் செய்த மனு உயர்நீதிமன்ற மதுரை கிளையில் நீதிபதிகள் துரைசுவாமி, ரவீந்தரன் அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த புதிய முறையானது இடைநிற்றலுக்கு வழிவகுக்கும் என மனுதாரர் தரப்பில் வலியுறுத்தப்பட்டது. அதற்கு, தேர்ச்சி பெறவில்லை எனில் மறுதேர்வு நடத்தப்படும் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மறுதேர்விலும் தேர்ச்சி பெறவில்லை எனில், அந்த குழந்தையின் நிலை என்ன? என அரசுக்கு நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

பத்திரிகைகளில் வெளிவந்த இந்த செய்திக்கு நடிகரும் பாஜக பிரமுகருமான எஸ்வி சேகர் தனது டுவிட்டரில், ’இது என்ன கேள்வி. அவங்க டைரக்டா நீட் எழுதி டாக்டராகவோ எஞ்சினீராவோ ஆயிடுவாங்க. ஒழுங்கா திறமையா சொல்லிக்குடுக்கிற ஆசிரியர்கள் இருந்தா பசங்க ஏன் பெயில் ஆகப்போராங்க! தனியார் பள்ளிகளில் இந்த பிரச்சினை இல்லயே. 100% ரிசல்ட் வருதில்ல. இங்க ஸிஸ்டம் சரியில்லயா? என பதிவு செய்துள்ளார்.

Leave a Reply