இஞ்சினியரிங் கவுன்சிலிங் முடிந்தது. சுமார் 1 லட்சம் இடங்கள் காலி

இஞ்சினியரிங் கவுன்சிலிங் முடிந்தது. சுமார் 1 லட்சம் இடங்கள் காலி

கடந்த சில ஆண்டுகளாகவே இஞ்சினியரிங் படிப்புக்கு மாணவர்கள் மத்தியில் ஆர்வம் இல்லாமல் இருந்து கொண்டிருக்கும் நிலையில் இந்த ஆண்டுக்கான இஞ்சினியரிங் கவுன்சிலிங் கடந்த ஜூன் 21ஆம் தேதி தொடங்கியது. முதன்முதலாக ஆன்லைன் மூலம் கவுன்சிலிங் நடைபெற்ற நிலையில் நேற்றுடன் கவுன்சிலிங் முடிந்தது.

தமிழகத்தில் மொத்தம், 509 இஞ்சினியரிங் கல்லுாரிகளில் 1.72 லட்சம் இடங்கள் உள்ளன. இதீல் 1.59 லட்சம் மாணவர்கள் விண்ணப்பித்தனர். இதில், தொழிற்கல்வி, முன்னாள் ராணுவ வீரர்களின் வாரிசுகள் மற்றும் விளையாட்டு பிரிவினருக்கான, ஒற்றைச்சாளர முறை கவுன்சிலிங்கில், 1,755 இடங்கள் நிரம்பின. பின், பொது பிரிவினருக்கு, ஒரு லட்சத்து, 70 ஆயிரத்து, 588 இடங்களுக்கு, ஐந்து சுற்றுகளாக கவுன்சிலிங் நடந்தது.ஐந்தாவது சுற்று நேற்று முடிந்தது. இதில், 20 ஆயிரத்து, 618 பேர் ஒதுக்கீடு பெற்றனர். ஐந்து சுற்றுகளிலும் சேர்த்து, 72 ஆயிரத்து, 608 பேர், இந்த ஆண்டு சேர்க்கை பெற்றுள்ளனர்.

நேற்றுடன் கவுன்சிலிங் முடிவடைந்த நிலையில் மொத்தம் 97 ஆயிரத்து, 980 இடங்கள் காலியாக இருப்பதாக அண்ணா பல்கலை அறிவித்துள்ளது. காலியாக உள்ள இடங்கள் கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply