இடைத்தேர்தலுக்கு முந்தைய நாள் தமிழகம் வரும் பிரதமர் மோடி
திருவாரூரில் வரும் 28ஆம் தேதி இடைத்தேர்தல் நடத்த போவதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள நிலையில் அதற்கு முந்தைய நாள் ஜனவரி 27ஆம் தேதி பிரதமர் மோடி தமிழகம் வருகை தரவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பிரதமரின் தமிழக வருகையை மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் இன்று நடந்த நிகழ்ச்சி ஒன்றில் உறுதி செய்துள்ளார்.
மேலும் பிரதமர் மோடிக்கு ராகுல் போட்டியில்லை என்றும், ராகுல் அம்மாவுக்கு பிள்ளை என்பது தவிர அவர் வேறு ஒன்றுமில்லை என்றும் கூறிய அமைச்சர் சுஷ்மா, சாதாராண ஏழை வீட்டில் பிறந்து படிப்படியாக உயர்ந்து இன்று மோடி பிரதமராக உயர்ந்துள்ளதாகவும், ராகுல் பெரிய குடும்பத்தில் பிறந்து நேரடியாக உயர துடிப்பவர் என்றும் இருவரையும் ஒப்பிட்டார்.